Tuesday, 13 January 2015

திண்டிவனத்திலிருந்து மயிலம் வழியாக பாண்டிச்சேரி செல்லும் பேருந்து வழியில், பெரும்பாக்கம் என்னும் இடத்தில் இருந்து 7 கி.மீ., தூரத்தில் திருவக்கரை உள்ளது. அருகில் உள்ள விமான நிலையம் சென்னை, தமிழ்நாடு. சென்னையில் இருந்து 150 கிலோ மீட்டர் தொலைவில் திருவக்கரை அமைந்துள்ளது. அருகில் உள்ள ரயில் நிலையம் திண்டிவனம், விழுப்புரம் மற்றும் பாண்டிச்சேரி.

பஸ் வசதி : திண்டிவனம், விழுப்புரம், பாண்டிச்சேரி ஆகிய நகரங்களில் இருந்து திருவக்கரைக்கு பஸ் வசதி உள்ளது.

பேருந்து வழித்தடங்கள்:
சென்னை - திண்டிவனம் - கூட்டேரிப்பட்டு - மயிலம் - பெரும்பாக்கம் – திருவக்கரை
அல்லது
சென்னை – பாண்டிச்சேரி – திருச்சிற்றம்பலம் கூட்ரோடு – பெரும்பாக்கம் – திருவக்கரை
அல்லது
                                                             விழுப்புரம் – முண்டியம்பாக்கம் – திருக்கனூர் – திருவக்கரை

மூர்த்தங்கள்

திருக்கோயிலில் பிரதான வாயிலில் ராஜகோபுரம் அமைந்துள்ளது. ராஜகோபுரத்தை அடுத்து உட்பகுதியில் இடப்பக்கமாக அருள்தரும் வககிரகாளிம்மன் சன்னதி உள்ளது. காளிக்கோயிலின் எதிரில் மேற்கு நோக்கிய நிலையில் ஆத்மலிங்கம் சன்னதி உள்ளது. காளிகோயிலில் இடதுபுறம் கிளி கோபுரம் (நடு கோபுரம்) முன்புறத்தில் திருநந்தி அமைந்துள்ளது. நந்திக்கு வலப்புறமாக திருகல்யாண மண்டபம் (நூற்றுக்கால் மண்டபம்) ஒன்று உள்ளது. நடு கோபுரத்தினை தாண்டி உள்ளே கருவறையில் மூலவர் மும்முகலிங்கமாக காட்சி தருகிறார். கருவறையில் முலவர் முன் மண்டபத்தில் இருபுறத்தில் பத்து அடி உயரத்தில் இரண்டு துவார பாலகர்கள் உள்ளனர்.


கருவறையில் உள்சுற்றில் நால்வர்கள். அடுத்து விநாயகர், சுப்ரமணியர், விஷ்ணு, துர்கை, அர்த்த நாரீஸ்வரர் உள்ளது. கருவறையில் தென்திசையில் குண்டல மாமுனிவர் என்னும் சித்தர் ஜீவசமாதி உள்ளது. இதன் எதிர்புறத்தில் மேற்கு நோக்கி ஸ்ரீ வரதராஜபெருமாள் தனித்து நின்ற நிலையில் எழுந்தருளியுள்ளார். வரதராஜ பெருமாள் சன்னதி பின்புறம் கிழக்கு நோக்கி சகஸ்வரலிங்க சன்னதி உள்ளது. இதன்வடதிசையில்மேற்கு நோக்கி நவக்கிரக சன்னதி உள்ளது. அருள்மிகு வடிவாம்பிகை அம்மன் சன்னதி தெற்கு நோக்கி உள்ளது. இங்குள்ள சன்னதிகள் அனைத்தும் வக்கிர நிலையில் அமைந்துள்ளதால் வக்கிர தோஷ நிவர்த்தி ஸ்தலமாக இவ்வாலயம் விளங்குகிறது.

தலவரலாறு

வக்கிராசூரன் என்னும் அரக்கன் சிவப்பெருமானை தனது கண்டத்தில் வைத்து பூஜை செய்ததால், தனது தவ வலிமையால் சிவபெருமானிடம் சாகா வரம் பெற்றான். தாம் பெற்ற வரத்தினை கொண்டு தேவர்களை துன்புறுத்தி வந்தான். தேவர்கள் சிவபெருமானிடம் சென்று முறையிட்டனர். சிவபெருமானும் திருமாலை அழைத்து வக்கிராசூரானை சம்ஹாரம் செய்யும்படி கேட்டுக் கொள்ள, பெருமாளும் சூரனுடன் போரிட்டு தனது ஸ்ரீ சக்கரத்தை வக்கிரசூரன் மீது பிரயோகம் செய்து சூரனை அழித்தார். வக்கிராசூரனின் தங்கையான துன்முகி தன் அண்ணனை போலவே கொடுஞ்செயல் புரிந்து வந்தாள். அரக்கியான அவளை வதம் செய்ய பார்வதிதேவி சென்றாள் ஆனால் அப்போது துன்முகி கருவுற்றிருந்தாள். எனவே பார்வதி துன்முகியின் வயிற்றை கிழித்து, அதிலிருந்து சிசுவை தனது வலதுகாதில் குண்டலமாக அணிந்து அரக்கியான துன்முகியை வதம் செய்தாள். வக்கிரசூடனின் தங்கையை அழித்ததால் பார்வதி இங்கு வக்கிரகாளியாக அமைந்து அருள்புரிகிறாள்.

திருக்கோயில் பூஜா காலங்கள்

மூன்று கால பூஜைகள் நடைபெறுகிறது.

காலம் 6.00 மணி நடை திறப்பு

காலை 8.00 - 8.30 மணி கால சந்தி

மதியம் 12.00 - 12.30 மணி உச்சிக்காலம்

மாலை 6.00 - 6.30 மணி சாயரட்ஷை

இரவு 8.30 மணி பள்ளியறை பூஜை

திருகோயில் காலை 6.00 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.


Blog Archive